கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூடியூப்பில் சதி மற்றும் பொய்கள் நிறைந்த செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த நிறுவனம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் இப்பணி சவாலாக இருப்பதாக யூடியூப் கூறியுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் மே 22 முதல் மே 26, 2022 வரை டாவோஸில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சூசன் வோஜ்சிக்கி, தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கு YouTube எப்போதும் தனது பணியை மேம்படுத்திக் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Best Bikes: பைக் வாங்கணுமா? அட்டகாசமாய் விற்பனையாகும் பைக்குகளின் லிஸ்ட் இதோ


கடந்த ஆறு ஆண்டுகளில் நிறுவனம் இந்த விஷயத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தேர்தல்கள் பற்றிய பொய்கள் யூடியூப்பில் அதிகரித்திருப்பதையும் ஒப்புக் கொண்டார். தவறான தகவல்களை உருவாக்குவதில் பெரும்பாலானோர் அதீத ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ள அவர், ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடர்பாகவும் பொய் தகவல்கள் பரப்பப்பட்டதாக கூறினார். இந்த தகவல்களை அடையாளம் கண்டு களையெடுப்பதில் பெரிய சவாலை யூ டியூப் நிறுவனம் எதிர்கொண்டிருப்பதாகவும், இதற்கான முழு காரணம் மற்றும் பின்னணியை புரிந்துகொள்ள முயற்சித்து வருகிறோம் என கூறியுள்ளார். 



இதனை சரிசெய்வதில் வருங்காலங்களில் முழு கவனத்தை செலுத்த இருப்பதாகவும் சூசன் கூறினார். அதற்கான முன்னெடுப்புகளை யூடியூப் நிறுவனம் தொடங்கியிருப்பதாகவும் கூறினார். ஜனவரியில், உலகளாவிய உண்மைச் சரிபார்ப்புக் கூட்டமைப்பு, தவறான தகவல்களின் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க YouTubeக்கு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதியது. யூடியூப்பில் இருக்கும் விஷம கருத்துகள் மற்றும் பொய் பரப்புரைகள் குறித்து ஏப்ரல் மாதம், நியூயார்க்கின் சிட்டி யுனிவர்சிட்டி மற்றும் டார்ட்மவுத் கல்லூரியின் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், யூ டியூப் தளத்தில் மீண்டும் மீண்டும் பரப்பப்படும் தகவல்களை அவர்கள் சுட்டிக்காட்டினர்.



இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சூசன், எங்கள் தளத்தை மேம்படுத்த தரமான பல அறிக்கைகள் வெளிந்திருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லாமல் பரப்பப்படும் தகவல்களுக்கு எல்லைக்கோடு நிர்ணயிப்பதிலும், தீங்கு விளைவிக்கும் அல்லது மோசமான தகவல்களை பரப்புவதை குறைப்பதிலும் தீவிரமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், யூடியூப்பின் சுதந்திரம் குறித்து பேசிய அவர், பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு சரியான தளமாக யூ டியூப் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். பெண்களுக்கான மிகப்பெரிய சமூக ஊடகமாகவும் யூடியூப் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


யூடியூப் தலைமை செயலதிகாரியின் இந்தப் பேச்சுக்குப் பிறகு பொய் மற்றும் புரளிகளை பரப்பி பணம் சம்பாதிக்கலாம் என இருப்பவர்களுக்கு பெரிய அடி காத்திருப்பதாக டெக் நிபுணர்கள் கூறியுள்ளனர். 


மேலும் படிக்க | ஜியோஃபை ரீசார்ஜ்: ஒரு மாதம் செல்லுபடியாகும் 3 போஸ்ட்பெய்ட் பிளான்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR