YouTube: இந்தியாவில் 2002ஆம் ஆண்டின் 3 மாதங்களில் 11 லட்சம் வீடியோக்களை நீக்கியது யூடியூப்
யூடியூப் ஜனவரி முதல் மார்ச் வரை 1.1 மில்லியன் இந்திய வீடியோக்களை நீக்கியிருக்கிறது. இது உலகிலேயே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி: சமூக ஊடகங்களில் பிரபலமான யூடியூப் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், அதாவது ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் 1.1 மில்லியன் வீடியோக்களை நீக்கியிருக்கிறது. இது உலகிலேயே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம் என்ன? அதிகமாக இடுகையிடுவது மற்றும் இலக்கு இல்லாத உள்ளடக்கங்கள் அதிகமாக இருப்பதாலும், பல வீடியோக்கள் மீண்டும் மீண்டும் பதிவிடப்பட்டிருப்பதால் அவற்றை நீக்கியதாகவும் YouTube தெரிவித்துள்ளது.
பார்வையாளர்களை, எதையாவது பார்க்கச் செய்வதற்கான முயற்சிகளை தவிர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. யூடியூப் ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் 1.1 மில்லியன் வீடியோக்களை நீக்கியது
மேலும் படிக்க | கூகுளுடன் டீல் பேசும் ஷேர் சாட் - எதுக்கு தெரியுமா?
கூகுளுக்குச் சொந்தமான யூடியூப் 2022 முதல் மூன்று மாதங்களில் இந்தியாவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை அகற்றியுள்ளது விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது, இது உலகளவில் அதிகம் என்பதால் மட்டுமல்ல, தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான வீடியோக்களை பதிவேற்றும் மனோபாவத்தையும் இது காட்டுகிறது.
இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவில், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் 358,134 வீடியோக்களை நீக்கப்பட்டன. யூடியூப் நிறுவனத்தின் சமூக வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.4 மில்லியன் சேனல்களை YouTube நிறுத்தியதாக நிறுவனம் கூறுகிறது.
ஸ்பேம் கொள்கைகளை மீறியதற்காக இந்த சேனல்களில் பெரும்பாலானவை நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | iQOO Neo 6: 50% தள்ளுபடியில் அமேசானில் ஸ்மார்ட்போன் விற்பனை
கூகுள் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வீடியோக்களை பார்வையாளர்கள் அதிகமாக பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்பதால் இந்த ஊடகம் பலரின் கவனத்தையும் அதிகமாக ஈர்த்துள்ளது. YouTube இலிருந்து கிளிக்குகள், பார்வைகள் அதிகமாக கிடைக்கும் என்பதால் தேவையற்ற வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படும் போக்கு நிலவுகிறது.
அதுமட்டுமல்ல, தீங்கு விளைவிக்கும் மென்பொருளைப் பரப்பும், தனிப்பட்ட தகவலைச் சேகரிக்க முயற்சிக்கும் அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் பிற தளங்களுக்கு பார்வையாளர்களை அனுப்பும் ஆபத்தையும் தடுக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனத்தின் யூடியூப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் படிக்க | 2023 போர்ஸ் கூர்க்கா இப்படித்தான் இருக்கும்: கசிந்த புகைப்படங்கள்
“YouTubeல் சமூக வழிகாட்டுதல்கள் உள்ளன, அவை அனுமதிக்கப்படாதவற்றுக்கான விதிகளை கட்டமைக்கின்றன. பொருத்தமற்ற உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தவும், இந்த வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தவும் மனிதர்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையான திறமைகளையே யூடியூப் நம்பியுள்ளது.
தானியங்கு அடையாளப்படுத்தும் அமைப்புகளிலிருந்தும், நம்பகமான ஃபிளாகர் திட்டத்தின் (என்ஜிஓக்கள் மற்றும் அரசு நிறுவனங்கள்) உறுப்பினர்களிடமிருந்தும் அல்லது யூடியூபின் பரந்த சமூகத்தின் பயனர்களிடமிருந்தும் அடையாளப்படுத்தல் (flags) வரலாம்.
சமூக வழிகாட்டுதல்கள் அமலாக்க அறிக்கையானது யூடியூப் பெறும் flags மற்றும் நிறுவனத்தின் கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பது பற்றிய உலகளாவிய தரவை வழங்குகிறது,” என்று கூகுளின் யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
YouTubeஇல் உள்ள பார்வைகள், விருப்பங்கள், கருத்துகள் அல்லது வேறு ஏதேனும் மெட்ரிக் ஈடுபாடு அளவீடுகளை விற்கும் உள்ளடக்கத்தையும் YouTube அகற்றியது. சந்தாதாரர்கள், பார்வைகள் அல்லது பிற அளவீடுகளை அதிகரிப்பதே ஒரே நோக்கமாக இருக்கும் உள்ளடக்கத்தையும் இந்த வகை ஸ்பேமில் சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஒசாமா பின்லேடன் உலகின் மிகச் சிறந்த எஞ்சினியர்: மாநில அரசு அதிகாரி சஸ்பெண்ட்
பார்வையாளர்களிடமிருந்து தனிப்பட்ட தகவலை சேகரிப்பது, YouTubeல் இருந்து பார்வையாளர்களை தவறாக வழிநடத்துவது அல்லது மேலே குறிப்பிட்டுள்ள தடைசெய்யப்பட்ட நடத்தைகளில் ஏதேனும் ஒன்றைச் செய்வதால், யூடியூப் உள்ளடக்கங்கள் நீக்கப்படும்.
2022 ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், யூடியூபின் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக 3.8 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை YouTube அகற்றப்பட்டுள்ளது. அவற்றில் 91 சதவீதம் முதலில் இயந்திரங்களால் அடையாளப்படுத்தப்பட்டது.
2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 943 மில்லியனுக்கும் அதிகமான கருத்துகளை YouTube அகற்றியது, அவற்றில் பெரும்பாலானவை ஸ்பேம் பிரிவில் வந்தவை. அகற்றப்பட்ட கருத்துகளில் 99.3+ சதவீதம் தானாகவே கண்டறியப்பட்டது.
2022ஆம் ஆண்டில் முதல் காலாண்டில், யூடியூப் மொத்தம் 220K வீடியோக்களை அகற்றியது. பிறகு மேல்முறையீட்டில், அவற்றில் 32 ஆயிரத்திற்குக்ம் மேற்பட்டவை மீண்டும் சேர்க்கப்பட்ட்டன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe