Top electric scooter: ரூ.1 லட்சத்துக்கும் குறைவான விலையில் டாப் எலக்டிரிக் ஸ்கூட்டர்கள்

ஒரு லட்சத்துக்கும் குறைவான விலையில் இருக்கும் டாப் எலக்டிரிக் ஸ்கூட்டர்களின் லிஸ்ட் இங்கே...  

Written by - S.Karthikeyan | Last Updated : May 31, 2022, 12:03 PM IST
  • டாப் எலக்டிரிக் ஸ்கூட்டர்கள்
  • குறைவான விலையில் கிடைக்கும்
  • மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்
Top electric scooter: ரூ.1 லட்சத்துக்கும் குறைவான விலையில் டாப் எலக்டிரிக் ஸ்கூட்டர்கள் title=

நல்ல மாடல் மற்றும் மைலேஜ் கொடுக்கும் டாப் ஸ்கூட்டர்களை தேடிக் கொண்டிருந்தீர்கள் என்றால், இங்கே உங்களுக்கு தெளிவான ஐடியா கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. ஓலா முதல் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை ஒரு லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்கூட்டர்களை இங்கே பார்க்கலாம். 

ஓலா எஸ்1

Ola S1 கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு Ola எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மலிவானது. ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் குறைவான விலையில் அதாவது 99,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மின்சார வாகனம் பல மாநிலங்கள் கொடுக்கும் மானியங்களால் 85 ஆயிரம் ரூபாய்க்கு கூட கிடைக்கிறது. மைலேஜ் 121 கி.மீட்டர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Best Bikes: பைக் வாங்கணுமா? அட்டகாசமாய் விற்பனையாகும் பைக்குகளின் லிஸ்ட் இதோ

ஹீரோ எலக்ட்ரிக் ஃபோட்டான் எச்எக்ஸ்

Hero Electric தற்போது நாட்டில் உள்ள மிகப் பழமையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டுகளில் ஒன்றாகும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்ற இந்த ஸ்கூட்டர் 74, 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்தந்த மாநிலங்களின் வரிவிகிதங்களை பொறுத்து விலையில் மாற்றம் இருக்கலாம். 5 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 108 கிலோ மீட்டர் பயணிக்கலாம். 

பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1

Bounce Infinity E1 ஸ்கூட்டர் பேட்டரி ஸ்வாப்பிங்குடன் வருகிறது. இது பலருக்கும் உபயோகமாக இருப்பதால் இந்த ஸ்கூட்டரை விரும்பி வாங்குபவர்கள் உண்டு. நீங்கள் இப்போது வாங்க விரும்பினால் 60,999 ரூபாய்க்கு வாங்கும் வாய்ப்பு உள்ளது. மணிக்கு 65 கிமீ வேகத்தில் செல்லும்.

ஒகினாவா பாராட்டு ப்ரோ

மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஒகினாவா முன்னணியில் இருக்கும் மாடலாக இருக்கிறது. விற்பனையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ள இந்த ஸ்கூட்டர், ரூ.79,845 விற்பனை செய்யப்படுகிறது. மற்ற ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது குறைவான மைலேஜ் மட்டுமே கொடுக்கும். அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால் 88 கி.மீ வரை பயணிக்கலாம். 

மேலும் படிக்க | EV6 Launch of KIA: இந்தியாவுக்கு 100 கார்கள் மட்டுமே விற்பனைக்கு

ஹீரோ எலக்ட்ரிக் NYX டூயல்

இரண்டு பேட்டரிகளின் தேர்வை வழங்கும் ஹீரோ எல்க்டிரிக் ஸ்கூட்டர்  NYX டூயல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 138 கிமீ வரை செல்லும். அதிகபட்ச வேகம் மணிக்கு 42 கிமீ மட்டுமே செல்ல முடியும். ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரம் ஆகும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News