இனி Youtube-ல் வீடியோவிற்கு Dislike செய்ய முடியாதா?
யூடியூபில் வீடியோக்களின் Dislike செய்யப்பட்ட எண்ணிக்கையை இனி பயனர்கள் பார்க்க முடியாது.
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் மிக முக்கியமான ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளது யூடியூப் நிறுவனம். யூடியூபில் வீடியோவிற்கு டிஸ்லைக் செய்யப்படும் எண்ணிக்கையை இனி பயனர்கள் பார்க்க முடியாது என்கிற முக்கியமான அப்டேட்டை செய்துள்ளது யூடியூப். அதாவது, முழுவதுமாக டிஸ்லைக் செய்யும் வசதியை நீக்காமல் வீடியோவிற்கு Dislike செய்யப்படும் எண்ணிக்கையை பயனர்கள் பார்க்க முடியாதவாறு செய்துள்ளது யூடியூப். வீடியோகளுக்கு Dislike செய்யப்படும் எண்ணிக்கையை வீடியோவை பதிவு ஏற்றியவர்கள் மட்டுமே இனி பார்க்க முடியும். படைப்பாளிகளின் சுதந்திரத்திற்காகவே இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது யூடியூப் நிறுவனம்.
ஒரு நடிகர் அல்லது தனிப்பட்டவர்களுக்கு எதிராக தங்களது வன்மத்தை காட்டுவதற்காக யூடியூபை மக்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களுக்கு வேண்டியவர்களை வைத்து ஒரு குழுவாக செயல்பட்டு தனக்கு பிடிக்காத ஒருவரின் வீடியோவிற்கு அதிகமான டிஸ்லைக் செய்கின்றனர். கடந்த வருடம் சுஜாதா சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களின் வீடியோக்களுக்கு டிஸ்லைக் அதிகமாக செய்யப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே டிஸ்லைக் பட்டனை நீக்கலாமா என்ற கருத்துக்களை கேட்டிருந்தோம். படைப்பாளிகளை இந்த மாதிரியான துன்புறுத்தலில் இருந்து நீக்க தற்போது டிஸ்லைக் பட்டனை நீக்கி உள்ளோம். இதன் மூலம் Dislike எண்ணிக்கை தெரியாததால் அதன் மீது கொண்ட வண்ணம் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். சிறிய சேனல்களில் மீது இந்தவகை துன்புறுத்தல் அதிகமாக இருப்பதை நாங்கள் கண்டு இருந்தும். அதனால், முழுவதுமாக டிஸ்லைக் ஆப்ஷனை நீக்காமல் பயனர்கள் பார்க்க முடியாதவாறு செய்துள்ளோம் என்று கூறியுள்ளது யூடியூப்.
ALSO READ ஐபோன்களை கண்காணித்த கூகுள் மீதான நடவடிக்கைக்கு பிரிட்டன் நீதிமன்றம் தடை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR