இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 4.4 மில்லியன் மக்களின் சார்பாக கூகுளுக்கு எதிராக கொண்டு வந்த சட்ட நடவடிக்கையை "ஒருமனதாக நிராகரிப்பதாக" உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மில்லியன் கணக்கான ஐபோன் பயனர்களை சட்டவிரோதமாக கண்காணித்ததாக குற்றம் சாட்டப்பட்ட கூகுள் மீதான நடவடிக்கைக்கு பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாட்டின் முதல் தரவு தனியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பேஸ்புக் மற்றும் டிக்டோக் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு எதிராக போடப்பட்டிருக்கும் இதேபோன்ற வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யும்.
உலகமே உற்று கவனித்துக் கொண்டிருந்த இந்த விவகாரத்தில் வழக்குத் தொடர நீதிமன்றம் அனுமதித்திருந்தால், கூகுளுக்கு 3.2 பில்லியன் பவுண்டுகள் ($4.3 பில்லியன்) அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் இருந்தன. "போட்டியிடும் ஒப்பீட்டு ஷாப்பிங் சேவைகளை விட, தனது சொந்த ஒப்பீட்டு ஷாப்பிங் சேவையை ஆதரிப்பதன் மூலம் கூகுள் துஷ்பிரயோகம் செய்ததாகக் கண்டறிந்த கமிஷனின் முடிவுக்கு எதிராக கூகுளின் நடவடிக்கையை பொது நீதிமன்றம் நிராகரிக்கிறது" என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
READ ALSO | லேண்ட்சாட் 9 எடுத்த பூமியின் முதல் புகைப்படங்கள்
ஆனால், இதற்கு முன்னரே, ஐரோப்பிய ஒன்றியத்தில் கூகுளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பிக்கையற்ற தீர்ப்பை எதிர்த்த கூகுளின் வழக்கை ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்றம் நிராகரித்ததும், ஐரோப்பிய ஒன்றிய போட்டித் தலைவர் மார்கிரேத் (Competition Commissioner Margrethe Vestager) வெஸ்டேஜர் விதித்த 2.42 பில்லியன் யூரோக்கள் ($2.8 பில்லியன்) அபராதத்தொகையை செலுத்த வேண்டிய தீர்ப்பும் கூகுள் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாகும்.
ஆனால், கூகுள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றமான ஐரோப்பிய நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தால், இந்த விவகாரம் மீண்டும் விசாரணை செய்யப்படலாம்.
கூகுள், நியாயமற்ற முறையில் போட்டி நிறுவனங்களை பின் தள்ளி லாபம் பெறுவதாக கூறி, நம்பிக்கைக்கு எதிரான அபராதமாக, ஐரோப்பிய ஒன்றிய போட்டி வசூலித்த அபராத வழக்குகளில் இந்த வழக்கு முதன்மையானது.
Also Read | இனி Google Driveஇல் ஆவணங்களை தேடுவது மிகவும் சுலபம்! புது அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR