மின்னணு உலகின் ஜாம்பவானான ஜிப்ரானிக்ஸ் தற்போது ரூ 15,999 விலையில் மரத்தால் ஆன "புல் மூன்" எனும் ஒலிபெருக்கியினை இன்று (வெள்ளிகிழமை) அறிமுகம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் சிறப்பம்சங்கள்:


மெல்லிய மர உறைகளில் மேலே சுற்றப்பட்ட இரண்டு 20.32cm சப்-வூபர், சிறப்பு சுற்று RGB விளக்கு அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.


டிஜிட்டல் மின் பெருக்கி, 200 வாட், ரிமோட் கண்ட்ரோல் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்கள்.


இதுகுறித்து ஜிப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குனரான பிரதீப் தோஷி கூறுகையில், இந்த "புல் மூன்" ஒலிபெருக்கிகள் பண்டிகை காலதின் கொண்டாட்டத்தை பூர்த்தி செய்ய உதவுகிறது. என கூறினார். 


இந்த "புல் மூன்", இரட்டை மைக்ரோபோன் ஜாக்கள், இரண்டு வயர்லெஸ் ஒலிவாங்கிகள் மற்றும் 32 ஜி.பி திறன்கொண்ட SD அட்டை ஸ்லாட் ஒன்று எனும் கூட்டாக வருகிறது. 


இந்த ஒலிபெருக்கிகள் மொபைல் போன்கள், பிசிக்கள், டி.வி.க்கள் மற்றும் பிற சாதனங்களுடன் யூ.எஸ்.பி போர்ட் மூலமாகவும், ப்ளூடூத் வழியாகவும் இணைக்க முடியும்.