தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் இன்று திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களை சந்திப்பதற்காக சென்னை கேபாலபுரம் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியில் ஆட்சி அமைய வேண்டும் என பல காரியங்களை முன்னெடுத்து வருபவர் சந்திரசேகர ராவ் அவர்கள். இச்சூழலில் இன்று அவர் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை சந்திக்கும் நிகழ்வு மூன்றாம் அணி அமைப்பதற்கான நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.


முன்னதாக சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த சந்திரசேகர ராவ் அவர்களை திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார். கோபாலபுரம் இல்லத்தில் அவருக்கும் மதிய உணவு பரிமாரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



இதற்கு முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜியை தெலுங்கானா முதல்வர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 


இச்சந்திப்பிற்கு பின்னர் மமதாக அவர்களும் 3-வது அணியை குறித்து அறிவித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக திமுக செயல் தலைவர் முக ஸ்டாலினும் மமதா பேனர்ஜி அவர்களின் 3-வது அணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்றை சந்திப்பு முக்கியமானதாகவே கருதப்படுகிறது.