அமெரிக்காவில் கடந்த 6-ந் தேதி போர்ட்லான்டில் இருந்து சான் ஜோஸ்-க்கு காரில் சென்ற இந்திய குடும்பம்பத்தினர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்தில் காணாமல் போனவர்களின் பெயர்கள் சந்தீப்(42), அவரது மனைவி சௌமியா(38), மகன் சித்தார்த்(12), மற்றும் மகள் சாக்சி(9) என்றும் அவர்கள் இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, கடந்த 6-ந் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.


முன்னதாக, வெள்ளிக்கிழமை ஈல் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் காணாமல் போன சவுமியாவின் உடல் என்று உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளன.


இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தீப், சாச்சி ஆகியோர் உடல் சடலமாக மீட்கப்பட்டது! ஆனால் சித்தாந்தின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. 


இந்நிலையில், சந்தீப் உள்ளிட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 6 மைல் தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து சிந்தாந்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, சந்தீப் குடும்பத்தாரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.