மக்களே உஷார்! மாயமாகும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு
2,000 ரூபாய் நோட்டுக்கள் மாயமானதால் தான் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பா.ஜ.க நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களான மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி மற்றும் தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் பணத்தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர்.
பணத்தட்டுப்பாடு காரணமாக, ஏடிஎம்கள் பணம் நிரப்பப்படாமால் இருப்பதால், பல ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பொது மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதி பட்டு வருகின்றனர். பண பற்றாகுறை காரணமாக பல மாநிலங்களில் ஏ.டி.எம்.கள் காலியாக உள்ளன. மேலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநில ஆளும் பா.ஜ.க நிதியமைச்சர் ஜெயந்த் குமார் மல்லையா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பண பற்றாகுறை என்பது மாநிலத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ளது. ரூ. 7 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மாயமானது தான் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்பது உண்மை'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்கானும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். அவரும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் இருந்து மாயமாகிவிட்டது. அவை எங்கே சென்றுள்ளது? என்று நேற்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.