தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழுவதையும் பாட உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த தமிழாசிரியரின் மகன் ராமபூபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:- மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழுவதுமாக எழுதப்பட்ட நிலையில் அதனை மாற்றியமைத்தோ அல்லது சிதைத்தோ பாடுவது இயற்றியவரை அவமதிக்கும் செயலாகும். எனவே, ஏற்கனவே இருந்த முழுபாடலையே இனி பாட வேண்டும் என உத்தரவிட அவர் வலியுறுத்தியிருந்தார்.


இந்நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தற்போதைய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், மீண்டும் பழைய பாடலை கொண்டு வருவதன் மூலம் அமைதியை குலைக்க விரும்புகிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 


மேலும் இந்த வழக்கு இனி விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறத்துவிட்டனர்.