சென்னை கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வராக ஆனந்தன் என்பவர் உள்ளார். கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான இடம் கோரி மாணவனின் பெற்றோர் முதல்வரை அணுகியுள்ளனர்.


இந்நநிலையில், அந்த பள்ளியின் முதல்வர் ஆனந்தன் என்பவர் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பெற்றோரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த பெற்றோர் லஞ்சம் கேட்டது பற்றி சி.பி.ஐயில் தகவல் தெரிவித்துள்ளனர். 


இன்று காலை பள்ளி வளாகத்தில் இருக்கும் முதல்வர் வீட்டில் வைத்துப் பெற்றோர் லஞ்சம் கொடுத்தபோது சி.பி.ஐ அனந்தனைச் சுற்றிவளைத்தனர். இதனையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வாங்கியபோது முதல்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதனையடுத்து ஆனந்தனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.