பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகள்!
பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது..!
வட மாநிலங்களான மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி மற்றும் தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் பணத்தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர்.
பணத்தட்டுப்பாடு காரணமாக, ஏடிஎம்கள் பணம் நிரப்பப்படாமால் இருப்பதால், பல ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பொது மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதி பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்துள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஸ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். பணத்தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் சுபாஸ் சந்திர கார்க் பேசினார்.
அதில் அவர் கூறியதாவது.....!
பணத்தட்டுப்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு கூடுதலாக பணத்தை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, 500 ரூபாய் நோட்டுகளை ஒரு நாளைக்கு 500 கோடி நோட்டுகளை அச்சிட திட்டமிட்டுள்ளோம். அதாவது, 5 மடங்கு 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் ரூ.2500 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட உள்ளோம். ஒரு மாதத்தில் ரூ70,000-75,000 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட உள்ளோம். அதனால், விரைவில் பணத்தட்டுப்பாடு பிரச்னை நீங்கும் என்றார்.
மேலும் அதிக மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது!