காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் விடுவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டுள்ளன. அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 15 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 90 சதவிகிதம் போக்குவரத்து முடங்கியுள்ளது.


மேலும், இன்று காலை 6 மணி முதல் கடைகள் மூடப்பட்டன. குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. மற்ற மாநில பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 


இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமய்யா கடிதம் எழுதி உள்ளார். 


அதில் அவர், காவிரி விவகாரத்தில் நதிநீர் பங்கீட்டிற்கு ஒரு அமைப்பைதான் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிய வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.