இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள 'காளி' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘எமன்’ ‘அண்ணாதுரை’ படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘காளி’. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். வணக்கம் சென்னை படத்திற்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கம் படம் ‘காளி’ என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, அம்ரிதா, ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருக்கிறார். 


ஏற்கனவே, இந்த ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதேபோல ‘அரும்பே’ எனும் சிங்கிள் டிராக் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளரான வில்லியம் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியான 'அண்ணாதுரை' திரைப்படத்தில் ஏற்ப்பட்ட நஷ்டம் காரணமாக காளி திரைப்படத்தின் உரிமையை எனக்குத் தருவதாக விஜய் ஆண்டனியும், அவரது மனைவி பாத்திமாவும் தெரிவித்தனர். 


ஆனால், தற்போது திரை உலகில் நடந்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் புதிய படங்களை திரையிடத் தயங்கி வருகின்றனர்.


இந்நிலையில், காளி படத்துக்காக என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக விஜய் ஆண்டனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, அண்ணாதுரை திரைப்படத்தின் மூலம் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்து விட்டு காளி படத்தை திரையிட உத்தரவிட வேண்டும்' எனக் மனுவில் கோரியிருந்தார். 


இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் (ஏப்.11) காளி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதற்குள் எதிர்மனுதாரர்கள் ரூ.4.73 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தினால் தடை நீக்கப்படும் செலுத்தத் தவறும்பட்சத்தில் தடை தொடரும்' என உத்தரவிட்டார்.