அனைத்து நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் கமிட்டி பிரதிநிதிகள் பங்குபெறும் கூட்டமானது கொல்கத்தாவில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக அமிதாப் சௌத்ரி கலந்துக் கொண்டார். 


இந்தக் கூட்டதின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சர்வதேச கிரிக்கெட் கமிட்டி தலைவர் டேவ் ரிசர்ட்சன் கூறியதாவது...!


உலகக் கோப்பை போட்டிகளின் காலத்தை மாற்ற விவாதம் செய்யப்பட்டது. 


வரும் 2021ஆம் வருடம் இந்தியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் சாம்பியன் கோப்பை நடைபெறும். 


ஆனால், நடைபெறும் சாம்பியன் கோப்பை பந்தயங்களை உலகக் கோப்பை பந்தயங்களாக மாற்ற அனைத்து பிரதிநிதிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றார். 


இதன்படி வரும் 2019 ஆம் வருடமும் 2023 ஆம் வருடமும் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற இருந்தது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 


மேலும், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி., தீவிரம் காட்டி வருகிறது. 2024ல் பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க இயலாது. 


2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நிச்சயம் இடம்பெறும். 


இதற்காக ஒலிம்பிக் கமிட்டி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.


அத்துடன் சாம்பியன் கோப்பை போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.