காலா படத்தை திரையிட கட்டாயப்படுத்த முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம்
``காலா`` படத்தை திரையிடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
''காலா'' படத்தை திரையிடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வருகிறது.
மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து உள்ளார். ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ், சமுத்திரகனி, நானே பட்டேகர், ஹியூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முன்னதாக இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இந்த காலா படத்திற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தனுஷ் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில் 'காலா' படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், பெங்களூர் காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தனுஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், காலா படத்தை திரையிடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தியேட்டர், ரசிகர்களுக்கு பாதுகாப்பு தருவது குறித்து அரசிடமே முறையிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
காலா படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், இது பாதுகாப்பு - சட்டம் ஒழுங்கு அரசு சம்பந்தப்பட்டது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.