கடந்த மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 


இதற்கிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக குளச்சலில் இருந்து கீழக்கரையை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் 3 மீட்டருக்கும் மேலாக அலைகள் உயரும் என்றும் நாளை இரவு வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தென் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குச் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.