பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது குற்றம்சாட்டப்பட்ட சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி தான் லோயா. இவர், கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் ஒரு திருமணத்துக்கு சென்றபோது தீடிரென மாரடைப்பால் உயிர் இழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதிபதி லோயாவின் மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற புதிய நீதிபதி, இந்த வழக்கில் இருந்து அமித்ஷா-வை விடுவித்து உத்தரவிட்டார்.


அதன் பின்னர், “நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல” என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 


தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. 


இதை யடுத்து, இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்திருந்தது. 


இந்நிலையில் லோயா வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு கோரிய மனுக்களுக்கு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், லோயா வழக்கிற்கு சிறப்பு விசாரணைக்குழு தேவையில்லை எனக் கூறி நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்தனர். மேலும் லோயாவின் வழக்கு இயற்கையானது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.