விஷாலின் இரும்புத்திரை படத்தின் ட்ரைலர் -Video!

வெளியானது விஷாலின் இரும்புத்திரை படத்தின் ட்ரைலர்!
வெளியானது விஷாலின் இரும்புத்திரை படத்தின் ட்ரைலர்!
விஷால் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "இரும்புத்திரை". பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஷால் ஃபிலிம் ஃபேக்டரி" மூலம் படத்தினை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருக்கிறார்.
இத்திரைப்படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் ஃபரஸ்ட் லுக் மற்றும் இசை வெளியாகி வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இன்று இரும்புத்திரை படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் இந்த மாதம் 11-ம் தேதி திரைக்கு வர உள்ளது எனவும் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.