'ஹரஹர மஹாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. சென்ற வெள்ளி கிழமை வெளியான இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்ப்பு பெற்று நல்ல வசூல் அள்ளி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பக்கம் செம ரெஸ்பான்ஸ் பெற்று வரும் இப்படத்திற்கு மறுபக்கம் விமர்சனமும் எழுந்துள்ளது. சினிமா இயக்குனர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை இந்த படத்திற்கு எதிராக கருந்து கூறிவிட்டனர்.


இந்த நிலையில் படத்தில் தங்களை பற்றி தவறாக சித்தரிப்பதாக கூறி திருநங்கைகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை தோஸ்த் என்ற அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகள் சாரா, எழுத்தளார் அப்சரா, ஆகியோர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்


'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் டைட்டிலே உள்ளர்த்தம் கொண்டதாக ஆபாசமாக இருக்கிறது. மேலும் இப்படத்தில் திருநங்கைகளைப் பற்றி ஆபாசமாக சித்தரித்தும், இழிவுபடுத்தியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.


மேலும், ஆபாசப் படமான இதை தடை செய்ய வேண்டும். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் தெரிவித்துள்ளனர்.