புதுடில்லி: தற்போது நமது புழக்கத்தில் இருந்து வரும் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என, மத்திய அரசு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில், புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து புதிய 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்தது. இந்த 2,000 ரூபாய் நோட்டு தொடருமா என்ற கேள்விக்கு, லோக்சபாவில், மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் பதில் கூறியுள்ளார்.


அதில் தெரிவித்துள்ளதாவது...! 


'தற்போது புழக்கத்தில் உள்ள, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு கேள்விக்கு பதில் கூறியுள்ள அவர், 'புதிதாக, 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், ஷிம்லா மற்றும் புவனேஸ்வரில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்படும்' என்று, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.