தேர்தலில் தோல்வி அடைந்தப் பின்னர் தோல்வியடைந்த கட்சிகள் கடைசியில் வாக்கு இயந்திரங்களை குறை கூறுகின்றனர் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமைத் தேர்தர் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், கொல்கத்தா மாநில தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது... “தேர்தல் தோல்வியைச் சகித்துக்கொள்ள முடியாத கட்சிகள் வேறு யாரையாவது குற்றம் சொல்வர், அந்த வகையில் வாக்கு இயந்திரங்களை அவர்கள் குறைகூறுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.


மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்தவற்கான வாய்ப்பே இல்லை. கடந்த ஜூலை மாதம் வாக்கை செலுத்த உறுதி செய்துகொள்ள ரசீது வழங்கும் முறையை அமல்படுத்தி தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டிருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையில் மக்களவைத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ஆட்சிக்காலம் முடிவதற்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடலாம். அதற்கு முன்பாக வெளியிட வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.