தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர்ச்சியாக பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என்று போராட்டம் தடையில்லாமல் நடைபெற்று வந்தது. நேற்று போராட்டத்தின் 100_வது நாள் என்பதால், எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியாதால், போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வாக்குவாதம் கலவரமாக மாறி, கலவரம் வன்முறையாக மாறியது. வன்முறை காரணமாக வாகனங்களுக்கு தீவைப்பதில் பரவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து சூறையாடும் வரை பரவியது. இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தூப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தூப்பாக்கி சூட்டில் அந்தோணி செல்வராஜ், க்ளாஸ்டன், கந்தையா, மணிராஜ், ஜெயராம், சண்முகம், தமிழரசன், வினிதா, வினிஸ்டா மற்ற மூன்று பேர் என 12 பேர் பலியாகி உள்ளனர். 70-க்கு மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காவல்துறையின் இச்சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.