நாட்டில் 13 மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிவதுடன், புயல் மற்றும் பனிக்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், வானிலை ஆய்வு மைய அறிக்கை குறித்து கூறியதாவது:


ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாசல பிரதேச மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிவதுடன், புயல் மற்றும் பனிக்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சில குறிப்பிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழையோடு பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அசாம்,  மேகாலயம், நாகாலாந்து, மணிப்பூர், மிஸோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதவிர, ஹரியாணா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசத்தம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழையோடு பலத்த காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ராஜஸ்தானில் இடியுடன் கூடிய மழையோடு, புழுதிப் புயலுக்கும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். 


 



 



 



 



 


கடந்த வாரம் 5 மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப் புயல் காரணத்தால் தற்போது வரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.