தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. மொத்தம் 23 நாட்கள் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடர் காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டும் ஜனவரி 8-ம் தேதி தமிழக ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 12-ம் தேதி வரை நடைபெற்றது. 


அதன்பின்னர், சட்டசபையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி கூடியது. அன்றைய தினம் மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மார்ச் மாதம் 15-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடியது. அன்று பிற்பகல் சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19 துவங்கி 22 வரை நடந்து முடிந்தது. 


இந்நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 9-ந் தேதி வரை நடைபெறும். மொத்தம் 23 நாட்கள் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறள்ளது. 


தொடர்ந்து, ஜூலை மாதம் 9-ம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 26-ம் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அன்றைய தினம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க இருக்கிறார். இடையில், ஜூன் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது!!