தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக தமிழக அரசு கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது...


’தமிழக அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறையின் அங்கமான, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப்படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனிநபர் கண்காட்சியாக நடத்திட ஒரு நபருக்கு ரூ.7,500/- வீதம் 4 நபர்களுக்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக்கண்காட்சியாக நடத்திட ஒரு குழுவுக்கு ரூ.15,000/- வீதம் 2 குழுக்களுக்கு அரசின் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக தகுதிவாய்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கலை பண்பாட்டுத் துறை – ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு (BIO- DATA), சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் (5 எண்ணிக்கைகள்), அவரவர்கள் படைப்புத்திறன் பற்றிய செய்திக் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து  


ஆணையர் ,கலை பண்பாட்டுத்துறை,
தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர்,சென்னை-600 008.
தொலைபேசி : 044-28193195


என்ற முகவரிக்கு 23.04.2018-க்குள் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. (இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்)"


என தெரிவிக்கப்பட்டுள்ளது!