இந்தியாவில் சுசூகி கார்களை டொயோட்டோ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி சுசூகி மற்றும் டொயோட்டோ இரு நிறுவனமும் தங்கள் திட்டங்களை அறிவித்துள்ளன. டொயோட்டோ நிறுவனம் சுசூகியின் உற்பத்தி நிலையத்தில் கார்களை தயாரித்து டொயொட்டோ மற்றும் சுசூகி ஆகிய இரு நிறுவனங்களிலும் விற்கப்படும் என தெரிவித்துள்ளது. 


மேலும், சுசூகி நிறுவனம் தனது அதி உயர் திறன் இன்ஜினை டொயோட்டோ மற்றும் டென்ஸோ கார்ப்ரேசன் உதவியுடன் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த புதியவகை இன்ஜின் பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டிலும் இயங்கும் வகையில்வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அது மட்டும் இன்றி பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுமே ஒரே இன்ஜினில் பயன்படுத்தும் வகையிலும் புதியவகை இன்ஜினை வெளியிடவுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.