உள்ளாட்சி தேர்தலில் முதல் வாக்களித்த மந்திரி ,யோகி ஆதித்யநாத்!
உத்தர பிரதேச நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், இன்று காலை வாக்களித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் உள்ளாச்சி தேர்தலுக்கான தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த தேர்தலானது மூன்று கட்டங்களாக நடைபெரும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இன்னிலையில், இன்று முதற்கட்ட வாக்கு பதிவு தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகரில் உள்ள வாக்கு சாவடியில் இன்று காலை வாக்களித்துள்ளார்.
முதற்கட்ட தேர்தலில், அயோத்தியா மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகள், 71 நகராட்சிகள் மற்றும் 154 நகர பஞ்சாயத்துகளுக்கான வாக்கு பதிவு நடக்கிறது. இந்த தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 1ந்தேதி வெளியிடப்படும். என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.