காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி தினகரன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் 6 வார கால அவகாசம் அளித்துள்ள நிலையில், அதற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவித்திருந்தனர். 


இந்த பணிகளுக்காக 9 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் உள்ள திலகர் திடலில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.


இந்தா உண்ணாவிரதத்தில் செய்தியாலகளிடம் பேசிய தினகரன்....! 


காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் மாநிலத்தின் உரிமையைக் காக்க முடியும் என்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தவறான வழியில் செல்வதாகவும் தெரிவித்தார்.


மத்திய அரசு மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுக்கிறோம் என கூறி தமிழகத்தை சோமாலியாவாக மாற்ற முயற்சிக்கிறது என்றும் அவர் செய்தியாலகளிடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.