தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி ஆதார் பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்காக, OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் பயன்படுத்தலாம்.


இந்நிலையில் தற்போது முக வடிவமைப்பை பயன்படுத்தி, ஆதாரை உறுதி செய்யும் வசதி, ஜூலை, 1 முதல், நடைமுறைக்கு வரும்' என, கூறப்பட்டு உள்ளது.


ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகளை, சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கிறது. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே ஆஜராகி, 'பவர் பாயின்ட்' மூலம், ஆதார் பயன்பாட்டின் அவசியத்தை விளக்கினார். அத்துடன் ஜூலை, 1 முதல் முக வடிவமைப்பை பயன்படுத்தி, ஆதாரை உறுதி செய்யும் வசதி நடைமுறைக்கு வரும்' என, சுப்ரீம் கோர்ட்டில் அவர் கூறினார்.