12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள உ.பி. மாநில இளம்பெண் வன்கொடுமை மற்றும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதை தொடர்ந்து, சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. 


இந்த வழக்கிற்கு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விளக்கம் அளித்துள்ளது...! 


அதில், மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது; 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது. மேலும் இதை தொடர்ந்து, இந்த வழக்கு ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க போக்சோ சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய நடவடிக்கை விரைவில் கொண்டு வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 


இதையடுத்து, தற்போது, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.