ஏழை மாணவர்கள் இளநிலை பட்டபடிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னைப் பல்கலைக்கழகம் 2010-2011ம் ஆண்டு முதல் இலவச கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி வருகிற கல்வி ஆண்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

3 மாவட்டங்களை சேர்ந்த மிகவும் பின்தங்கிய மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இலவச கல்வி திட்ட விண்ணப்பத்தை சென்னைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.unom.ac.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிட்ட நாளில் இருந்து 15 நாள்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.