பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் ஸ்பெஷல் ஆஃபரை வோடாஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிலையன்ஸ் ஜியோ-வின் வருகைக்குப் பின், ஆட்டத்தை ஓரம் கட்டிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தினமும் பல அசத்தல் ஆஃபர்களை வழங்கிவருகின்றன. ஏர்டெல், ஜியோ அதிரடியாக இலவச டேட்டா ஆஃபர்களை அள்ளிவிட, ஏர்செல் உள்ளிட்ட சிறிய நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன. 


ஏர்டெல், ஜியோவுக்குப் போட்டியாக வோடாஃபோன் நிறுவனமும் பல்வேறு ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. தற்போது, ரூ.18-க்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. திரைப்படங்கள், பாடல்கள், கேமிங் அல்லது அதிக மெமரி கொண்ட தரவுகளை டவுன்லோடு என எதற்கு வேண்டுமானாலும் இந்த டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ரீசார்ஜ் ஆக்டிவேட் ஆனதில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மட்டும் தான் இந்த அன்லிமிடெட் டேட்டா. ஒரு மணி நேரம் முடிந்த பிறகு மீண்டும் ரூ. 18 க்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். 


இதுதவிரப் பல்வேறு சலுகைகளை வோடாஃபோன் நிறுவனம் வழங்கி வருகிறது. அதில், ரூ.399க்கு 20 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதனுடன் தேசிய அழைப்புகள், தேசிய ரோமிங்கின் போது இலவச அவுட் கோயிங் மற்றும் இன் கமிங் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகிறது. 


வோடாஃபோனில் அதிகபட்ச சலுகையாக, ரூ.2,999க்கு 300 ஜிபி டேட்டா, 200 நிமிடங்கள் அமெரிக்கா, கனடா, ஹாங்காங், மற்றும் இதர குறிப்பிட்ட நாடுகளுக்கான அழைப்புகள், ஒரு ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.