கற்பழிப்பு வழக்கு: BJP MLA-க்கு வழங்கப்பட்ட `ஒய்` பிரிவு பாதுகாப்பு வாபஸ்
உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங்-க்கு கொடுக்கப்பட்ட `ஒய்` பிரிவு பாதுகாப்பு வாபஸ்..!
உன்னாவ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங்-க்கு கொடுக்கப்பட்டிருந்த 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்திரபிரதேச மாநிலம் முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டிற்கு முன்பு, இளம்பெண் ஒருவர், தன் குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்கையில்... பாஜக MLA குல்தீப் சிங் சென்கர் மற்றம் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட MLA மீது வழக்கு தொடுக்க முற்பட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் பலரிடம் புகார் அளித்தப்போதிலும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனையடுத்து முதல்வரிடம் தெரிவித்த போதிலும் தகுந்த நியாயம் கிடைக்கவில்லை.
இதனால் கோபமுற்ற இளம்பெண் "எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் இல்லையேல் தற்கொலை செய்துக்கொள்ளுவேன்" என தெரிவித்துள்ளார்.இந்த விவாகாரம் குறித்து குற்றம்சாட்டப்பட்ட MLA குல்தீப் சிங் தெரிவிக்கையில்... என்னை சுற்றி சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த சம்வத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து, பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, இந்திராநகர் பகுதியில் உள்ள வீட்டில் உன்னாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் சென்காரின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், உன்னாவ் சம்பவத்தில் தொடர்புடைய எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்காருக்கு அளிக்கப்பட்டிருந்த 2 கமாண்டோ அதிகாரிகள் அடங்கிய 'ஒய்' பிரிவு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், உன்னாவ் சம்பவத்தில் தொடர்புடைய பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிறையில் இருந்து வருகிறார். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.