இரான் அணு திட்டம் குறித்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தங்கள் ஏற்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் கருத்து தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப்...!


2015ஆம் அண்டு போடப்பட்ட அந்த ஒப்பந்தம் ஏமன், சிரியா மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும். 


எனவே அந்த ஒப்பந்தம் "பைத்தியக்காரத்தனமானது" ஆகையால் அதை விட சிறப்பான ஒரு ஒப்பந்தம் உருவாகலாம் என்றார்.


முன்னதாக, ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், இரான் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளாக கருதப்படும் நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.


அவை, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் மத்திய கிழக்கில் அதன் பங்கு ஆகியவை அடங்கிய புதிய ஒப்பந்தமாகும்.


இந்த, ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் "மோசமான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என இரான் எச்சரித்துள்ளது குறிபிடத்தக்கது.


என்னினும், இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார். அதற்கான காலக்கெடு மே 12 எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஆகையால் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற கூடாது என மக்ரூங் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல் வெள்ளியன்று அமெரிக்காவிற்கு விஜயம் செய்து ஒப்பந்தத்தை நிராகரிக்கக் கூடாது என டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


மேலும், அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் இரான் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் என இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளார்.