தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட சதி: வைகோ ஆவேசம்!!
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இச்சம்பவத்தால் கடந்த மூன்று நாட்களாக அரசு பேருந்துகள் இயக்கபடாமல் இருந்தது. இதனையடுத்து கடந்த 25-ஆம் நாள் காவல்துறை பாதுகாப்புடன் பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வளவு நாள் இல்லாமல் தற்போது சிகிச்சையின்போது ஜெயலலிதா பேசிய ஆடியோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரம் இது வெளியிடப்பட்டதற்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மூடிமறைக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகத்தான் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ..!
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்க்க தூத்துக்குடி மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நடத்தினால் இன்னும் 10 மாவட்டங்களில் இருந்து ஆட்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என அவர் கூறியுள்ளார்.
“ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு கூறுவது ஏமாற்றும் வேலை என்றார். இன்னும் எத்தனை நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கினாலும் ஸ்டெர்லைட் ஆலையை இயங்கவிடமாட்டோம் போராட்டம் தொடரும் என்றார்.