பாக்கிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தமிழக வம்சாவழி வீரருக்கு வாய்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மார்ச் 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 


இந்த தாக்குதலில் இலங்கை வீரர்கள் ஜெயவர்த்தனே, சங்ககாரா உட்பட 7 பேர் காயமடைந்தனர். மேலும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையை சேர்ந்த 7 பேர் பலியாயினர். 


இச்சம்பவத்திற்கு பின்னர் மற்ற நாட்டினர் பாக்கிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுப்பு தெரிவித்து வருகின்றது. எனினும் சமீபத்தில் ஜிம்பாப்வே அணி மட்டும் பாக்கிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது.


இதனையடுத்து தங்கள் நாட்டில் பிரச்சனைகள் இல்லை எனவும், வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் பாக்கிஸ்தான் தரப்பில் வலியுறுத்தி வரப்படுகிறது. இந்நிலையில் தற்போது மேற்கிந்தி தீவுகள் அணி பாக்கிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட விருப்பம் தெரிவிதுள்ளது எனினும், இந்த சுற்றுப் பயணத்தில் மூத்த வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளனர்.


இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கைமாறியுள்ளது. 



3 டி20 போட்டிகள் கொண்ட இத்தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழக வம்சாவழியை சேர்ந்த வீராசாமி பெருமாள் என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவர் இதற்கு முன்னதாக அந்நாட்டின் U19 அணியில், உள்ளூர் போட்டிகள், சில சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!