ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் நவ்சேரா பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் பாலக்கோட் நகரில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  



அவர்கள் சவுத்ரி ரம்ஜான், அவரது மனைவி மல்கா பீ மற்றும் அவர்களது 3 மகன்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மேலும், 2 சிறுமிகளும் பலத்த காயமடைந்துள்ளனர்.  அவர்கள் அருகில் இருக்கும்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.  



ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அவ்வபோது இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.