உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகுப்புவாதத்தை முறியடிக்க மே தினத்தில் உறுதியேற்போமென என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த அறிக்கையில் கூறியதாவது:-


உலகத்தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குறிக்கும் மே தினத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகுப்புவாதத்தை முறியடிக்க மே தினத்தில் உறுதியேற்போமென அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.


கர்நாடகாவில் பா.ஜ.,விற்கு ஆதரவாக சூறாவளி வீசுகிறது: மோடி பேச்சு!


மத்தியில் ஆளும் பாஜக அரசு தொழிலாளர் உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து வருகிறது. அதன் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் காரணமாகப் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதாலும், சிறு குறு தொழில்கள் நலிவடைவதாலும் லட்சக் கணக்கானவர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன. இந்தச் சூழலில் நீண்ட நெடும் போராட்டங்களினால் வென்றெடுக்கப்பட்டத் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்.


‘நீட்’ சட்ட நகல் எரிப்புப் போராட்டம் - தொல்.திருமாவளவன் அழைப்பு


இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு புரட்சியாளர் அம்பேத்கர் ஆற்றிய பங்கு மகத்தானது 12 மணி நேரம் வேலைசெய்யவேண்டும் என்றிருந்த நிலையை மாற்றி வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைத்தது; ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சம வேலை சம ஊதியம் என்பதைக் கொண்டுவந்தது; 1942 ஆம் ஆண்டு குறைந்தபட்ச கூலி சட்டத்தை இயற்றியது; தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது.


இவையெல்லாமே இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு புரட்சியாளர் அம்பேத்கர் அளித்த கொடைகளாகும். அவர் வழியில் பயணிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவரது கருத்தியலின் தொடர்ச்சியாகவே இடதுசாரிகளோடு இணக்கமான நல்லுறவைப் பேணி வருகிறது.


தோல்வி எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது -திருமாவளவன்


ஒடுக்கப்பட்ட மக்களும் பாட்டாளி வர்க்கமும் ஒன்றிணைவதோடு மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைத்தால்தான் வகுப்புவாத பேராபத்தை முறியடிக்க முடியும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. அதற்காகப் பாடாற்ற இந்த மே தினத்தில் உறுதி ஏற்கிறோம்.


இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.