கர்நாடகாவில் பா.ஜ.,விற்கு ஆதரவாக சூறாவளி வீசுகிறது: மோடி பேச்சு!

பிரதமர் மோடி கார்நாடகா மாநிலத்தில் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தினை இன்று முதல் துவங்கியுள்ளார்!  

Last Updated : May 1, 2018, 02:01 PM IST
கர்நாடகாவில் பா.ஜ.,விற்கு ஆதரவாக சூறாவளி வீசுகிறது: மோடி பேச்சு! title=

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

எனவே, ஆளும் காங்., பா.ஜ. இடையே கடும் போட்டி நிலவுகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்றோக வந்தாலும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பிரதமர் மோடி தற்போது கார்நாடகா மாநிலத்தின் சாம்ராஜ்நகரில் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தினை துவங்கியுள்ளார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெறும். கர்நாடகாவின் எடியூரப்பா எதிர்கால முதல்வராவார். வாரிசு அரசியலில் நம்பிக்கை கண்ணியத்திற்கான எல்லையை காங்கிரஸ் தலைவர் உடைத்துவிட்டார். 

பா.ஜ.,வை திட்டுவதில் ராகுல் தீவிரமாக உள்ளார். ஆனால், 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை நாங்கள் செய்துள்ளோம். 

ஏழைகளின் வாழ்கையை பற்றி கவலை கொள்ளத காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை நம்முடைய மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றது. 

2009ல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என சோனியா கூறினார். பெரிய வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ், அதனை மோடி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது. 

வந்தே மாதரத்தை இழிவுபடுத்தியவர்கள் தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். மன்மோகன் சிங்கிற்கு ராகுல் மரியாதை அளிக்கவில்லை. தனது தாய் சோனியாவின் வார்த்தைகளுக்கு ராகுல் மதிப்பளிக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற மன்மோகன் தவறிவிட்டார். 

மேலும், காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக அரசின் சாதனைகள் குறித்து 15 நிமிடங்கள் ராகுலால் பேச முடியுமா, என்றும் கேள்வி எழுபியுள்ளார்..

Trending News