தென்னிந்திய நடிகையான நிக்கி கல்ராணியின் அழுகுரல் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் யாகாவராயினும் நாகாக்க படத்தின் மூலம் அறிமுகமானா நிக்கி கல்ராணி தென்னிந்திய நடிகையாவார். இவர் தமிழைத் தவிர கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். 


முன்னதாக, இவர் நடிப்பில் வெளிவந்த ஹரஹர மகாதேவகி என்ற திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதையடுத்து அவருக்கு அதிகளவில் அடல்ட் பாணி படங்களே வர தொடங்கியதாம். எனினும், 
இவர் முக்கிய காத பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறாராம். 


இந்நிலையில், இவர் தற்போது, கீ மற்றும் சார்லி சாப்ளின் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருக்கிறார். இந்த திரைப்படங்களின் படபிடிப்பின் போது குறும்புத்தனமாக, குழந்தை போல பேசுவது போன்று  அழகான டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


Click Link..!https://www.instagram.com/p/BiuG6Z0lDGG/?taken-by=nikkigalrani