உலகம் முழுவது நல்ல வெற்றியை கொடுப்பவர் நடிகர் விஜய். அந்த வகையில், கேரளாவில் தமிழ் நாட்டிற்கு இணையாக விஜய் படங்களுக்கும் நல்ல வரவேற்பு உண்டு. விஜய் ரசிகர்கள் பல நற்பணிகளை செய்து வருவது அவ்வப்போது செய்திகளாக பரவும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இளையதளபதி விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி 62’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன், படப்பிடிப்பு தற்போது சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், இளையதளபதி விஜய் மகன் பட்டம் வாங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா பிரபலங்களின் பிள்ளைகள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். எனவே, இதனை கண்ட விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.