உலக அளவில் விளையாட்டு வீரர்களின் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலை பிரபல போபர்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 83-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் ஆண்டுக்கு ரூ.160.95 கோடி சம்பாதிக்கிறார் என்று அந்தநாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலிக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கியதும், அதிக விளம்பர படங்களில் நடிப்பதுமே இவரின் சம்பள உயர்விற்கு காரணமாக இருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. 


 பிரபல போபர்ஸ் நாளிதழ் வெளியிட்ட இந்த பட்டியலில்,,,!  விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் விராட் கோலி 83-வது இடத்தையும், பிரபல குத்துச்சண்டை வீரரான மேவெதர் ஆண்டிற்கு ரூ.1,900 கோடி சம்பாதித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவரை பின் தொடர்ந்து பிரபல கால்பந்து வீரர்களான ரொனால்டோ, மெஸ்சி, கூடைப்பந்து வீரர் லீபீரன் ஜேம்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.