கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2’ படத்தில் கமல்ஹாசன் தவிர ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் பல தடைகளை கடந்து திரைக்கு வந்தது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது “விஸ்வரூபம் 2” படப்பிடிப்பு மற்றும் புரொடக்ஷன் என அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த மார்ச் 16 இப்படம் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு U/A சான்றிதழ் அளித்துள்ளனர். தணிக்கை சான்றிதழ் பெற்றதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில் தற்போது “விஸ்வரூபம் 2”  ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.



 



 


இரண்டு ஆண்களுக்கு பிறகு கமல்ஹாசனின் படம் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் இப்படத்திற்கு அமோக வரவேற்பு அளிக்க காத்திருக்கின்றனர்.