உத்தர பிரதேச மாநிலம் கைரானா தொகுதியில் இன்று மக்களவை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேபோன்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யான ஹுகும் சிங் மரணம் அடைந்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதில் சிங்கின் மகள் மிருகங்கா சிங் அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.  அவருக்கு எதிராக ராஷ்டீரிய லோக் தள கட்சியின் தபசும் ஹசன் நிறுத்தப்பட்டு உள்ளார். ஹசனுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன.



இதற்கு முன் கோரக்பூர் மற்றும் பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடைந்தது. இதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் கைரானா தொகுதிக்கான தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஒரு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.



இந்நிலையில், 4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது!