உத்தரப் பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 25 ராஜ்யசபா இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் 58 ராஜ்யசபா இடங்கள் காலியாக இருந்தன. அதில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஜவடேகர் உட்பட 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 25 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.


ராஜ்யசபாவின் 25 எம்.பி. பதவிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலியாக உள்ள 58 இடங்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 25 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் உத்தரப் பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர், தெலுங்கானா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு அருண் ஜெட்லி, ஜெயா பச்சன் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 


இன்று காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி உள்ள நிலையில் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.