இரண்டு நாள் பயணமாக நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடி!
பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேபாளம் வந்தடைந்தார்!
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு 3-வது முறையாக நேபாளத்திற்கு வந்துள்ளார். நேபாளத்தின் பிரதமராக பதவியேற்ற கே.பி. ஷர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேபாளம் வந்துள்ளார். பின்னர், மோடி, ஜானக்பூர் மற்றும் அயோத்தி இடையேயான பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்த பிறகு விழாவில் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது...!
சீதா தேவியின் மண்ணிற்கு செல்ல வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறி உள்ளது. அந்த வாய்ப்பு இன்று கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா மற்றும் நேபாள உறவு இந்த சந்திப்பு மீண்டும் பலப்படுத்தி உள்ளது. மன்னர் ஜானக் மற்றும் தஷ்ரதா, ஜானக்பூர் - அயோத்தியை மட்டுமல்ல, இந்தியா - நேபாளத்தையும் இந்த பஸ் போக்குவரத்து மூலம் இணைத்துள்ளார்.
இந்திய மற்றும் நேபாள மக்கள் பரஸ்பரம் மதிப்பும், அன்பும் கொண்டுள்ளனர். ஆன்மிக சுற்றுலா தலமாக நேபாளம் திகழ்கிறது. நேபாளம் இல்லாமல் இந்தியா மீதான நம்பிக்கை பூர்த்தி அடையாது என்றார்.