ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் மத்திய அரசின் 4-ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி கூறியதாவது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாநதி நீர் பிரச்னையால் ஒடிஷா மாநில விவசாயிகள் தவிக்கின்றனர், அவர்களது பிரச்னைகளை சரி செய்து, அவர்கள் சந்திக்கும் சவால்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார். 


தொடர்ந்து பேசிய அவர்,,!


நமது நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 10 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 கோடி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 4 கோடி ஏழை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளோம் என கூறியுள்ளார்.


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிப்பவர்கள் பலர், ஏழ்மையில் பிறந்து வளர்ந்தவர்கள், அதனால்தான் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம் என்றார்.


நமது நாடு இன்று மோசம் நிறைந்த அரசாட்சியில் இருந்து நல்ல அரசாட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த 4 வருடங்களில், நமது இந்தியா மாறும் என 125 கோடி இந்தியர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.


கடந்த 2014ம் ஆண்டு வரை 39 சதவீத மக்களே சுகாதார வசதிகளை பெற்றிருந்தனர். ஆனால் இன்று 80 சதவீதத்தினர் இதனை பெற்றுள்ளனர்  என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும், காங்கிரஸ் ஆட்சியில், யூரியா தட்டுப்பாடு காரணமாக, விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. தற்போது யூரியா தட்டுப்பாடே கிடையாது என்பதையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.