பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் முதல் பகுதியாக அவர் தற்போது, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இந்தோனேஷியா நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். இதையடுத்து, அவரை இந்தோனேஷிய அதிபர் விடோடோ சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து வரவேற்றார். 


இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களும் முறைப்படி வர்த்தகம், முதலீடு மற்றும் கடற்பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். 


இதன்பின்னர், இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் விடுதலைக்கு போராடி உயிர் பிரிந்த கலிபாட்டா தேசிய வீரர்களுக்கான கல்லறைக்கும் பிரதமர் மோடி சென்றார். 


இந்தோனேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 70 ஆண்டு காலமாக ராஜ்யரீதியிலான உறவு உள்ளது. இந்த பயணத்தின்போது இந்தோனேசியாவுடன் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா பல ஒப்பந்தங்களை செய்து கொள்ள இருக்கிறது. 


மேலும், இந்தோனேசியாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, வருகிற 1-ஆம் நாள் சிங்கப்பூர் செல்கிறார். அங்கு நடைபெறும் ஷான்கிரி- லா மாநாட்டில் அவர் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.