மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும் -சந்திரசேகர் ராவ்!
3-வது, 4-வது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை; நாங்கள் 3-வது அணி இல்லை -தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ்!
3-வது, 4-வது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை; நாங்கள் 3-வது அணி இல்லை -தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ்!
தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். இதில் முதல் கட்டமாக அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். இதையடுத்து இன்று இது குறித்து ஆலோசிக்க தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
இன்று சென்னை வந்த சந்திரசேகர் ராவ் கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு உடன் இருந்தனர்.
பின்னர் ஸ்டாலினுடன் ஒரே காரில் அவரது வீட்டிற்கு சந்திரசேகர் ராவ் சென்றார். இதையடுத்து அவர் ஸ்டாலினுடன் 3வது அணிக் குறித்து ஆலோசனை நடத்தினர். இத சந்திப்பையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியதாவது; 2004-ம் ஆண்டுக்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதியை தற்போது சந்தித்து பேசினேன்.
3-வது, 4-வது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை; நாங்கள் 3-வது அணி இல்லை. மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும், அதை நோக்கியே எங்களது பயணம் இருக்கும்.
மே மாதம் 10-ம் தேதி நடைபெறும் விவசாயிகள் நலத்திட்ட தொடக்கவிழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என அவர் தெரிவித்தார்..!